மைனா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகும்தனுசின் அம்மா கணக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பதை விரும்பாத இயக்குனர் ஏ,எல்.விஜய் அவருக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இந்நிலையில் அமலாபாலுக்கும் விஜய்க்கும் இடையே அவர் மீண்டும் நடிப்பது குறித்து பிரச்சனை ஏற்பட்டதாகவும்,ஆனால் அமலாபால் தான் நடிப்பதில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரின் மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், தற்போது விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.இச் செய்தி குறித்து இருதரப்பும் இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இருவரின் பிரிவுக்கு அந்த வேலையில்லாத நடிகரே காரணம் என்றும் வலை தளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.