
கோர்ட்டார் கேட்கிறார் ” உங்கப்பாவுடன் போறியா ?”
“மாட்டேன் !”உறுதியுடன் சொல்கிறான் சிறுவன்.”மாமாவுடன்தான் போவேன் “என்று ராஜ்கிரணின் கை பற்றுகிறான்.கதை வேகம் எடுக்கிது.!
பத்து வயசு இருக்கலாம் அந்த பயலுக்கு.! தாசில்தார் அப்பன் பிரகாஷ் ராஜை கொல்வதற்கு கத்தியுடன் திரிகிறான் மகன் விருமன் .அவன்தான் வளர்ந்து வாலிப முறுக்குடன் மல்லு கட்டுகிற கார்த்தி !
மகனுக்கும் அப்பனுக்கும் அப்படி என்ன தீராத பகை.?
தமிழ்ச்சினிமாவில் மதுரை மாவீரனாக ,கிராமியமுடன் ஒட்டி வாழ்கிற ஒரே ஆளு கார்த்தி தான்.!பருத்தி வீரனை நினைவு படுத்தும் விருமன் வருச நாட்டுப்பகுதியில் கிங் மாதிரி வாழ்கிற ஆளு. வேல்கம்பு .கத்தி ,அருவா எல்லாமே கார்த்தியின் கை தான்.!விசில் அடிச்சு அல்லு சில்லு பறக்குது தியேட்டரில் என்றால் அது விருமனுக்குதான் ! கூடவே ராஜ்கிரண் ,சூரி ,மைனா நந்தினி இவர்கள் உடல்மொழிகளால் கவருகிறார்கள்.ராஜ்கிரண் தி பெஸ்ட் !
“எறங்கிக்குத்து ,சேலையை ஏத்திக்கட்டி பயலுகளை மப்புல தள்ளுர மாதிரி போடு டப்பாங்குத்து “என்கிற லெவலுக்கு ஆட்டம் போடுவதில் சமத்துக்குட்டி அதிதி ஷங்கர்.!கேரக்டரில் ஒன்றிப்போகிற அளவுக்கு உள்வாங்கி நடித்த மாதிரி தெரியல..
வருச நாட்டு பழக்க வழக்கங்களை கதாசிரியர் -இயக்குநர் முத்தையா ஒளிப்பதிவாளர் செல்வகுமாருடன் பதிவு செய்திருக்கிறார்.
பருத்திவீரனாக வாழ்ந்து விட்ட கார்த்தியை விருமனில் நகலெடுத்திருக்கிறார்கள் .அதிதிக்கும் பிரியாமணியைப்போல ஒப்பனை செய்திருக்கிறார்கள்.
இத்தனை பேர் தேவையா என்றால் தேவைதான் கதையின் உறவு முறைகளின் . உறவு சார்ந்த உறுத்துடன் பங்காளி சண்டைக்கு ஆள் போட்டிருக்கிறார் கதையின் ஆசிரியர்.
தாசில்தார் பிரகாஷ் ராஜ் .இவருக்கு நெஜத்திலுமே சுகரா ?மனுசன் வாடிப்போயிட்டாரே மக்கா ! பதவித் திமிரு .பணத்திமிரு ,உடம்பு திமிரு. நாலு பிள்ளையை பெத்து ஆளாக்கிவிட்ட பொண்டாட்டி (சரண்யா பொன்வண்ணன்.) இருந்தாலும் ராத்திரி ஆட்டத்துக்கு புது ஆளு தேவைப்படுது.அதுதான் பொண்டாட்டி தீ குளிக்கிறதுக்கும், விருமனின் கொலை வெறிக்கும் காரணமாக இருக்கிறது. எப்படி திருந்துறார் தாசில்தார் பிரகாஷ் ராஜ் ? 
கடைக்குட்டியாக கார்த்தி. தம்பியின் ரேஞ்சே வேற ! அப்பனை போட்டுத்தள்ளுகிற அளவுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறிப்போச்சு ..தீர்ந்தார் தாசில்தார் என்கிற நிலையில் அதிதி சங்கர் படக்குன்னு உதட்டுல உதடு வச்சு கனத்தை ஏத்துனதும் கார்த்தியின் முகமும் கையும் செயலத்துப்போகிறதை ….சூப்பர் சீன் கார்த்தி.!
ராஜ்கிரண் தாய்மாமனாக வாழ்ந்திருக்கிறார் .கல்யாணமாகாமல் கட்டுப்பாட்டுடன் வாழ்கிற கேரக்டர்களை நிறைய பார்த்திருக்கிறோம்.
சூரிக்கு இப்படி கைத்தடி வேஷம் கொடுத்தா பின்னிருவான் மனுசன் .ஜோடி இல்லேங்கிற குறை இல்லை.
மைனா நந்தினியின் டயலாக் டெலிவரி ,மேனரிசம் அப்படியே குறும்புக்கார பொண்டாட்டியை கொண்டு வந்து விடுகிறது.
கருணாஸ் ,சிங்கம் புலி ,வடிவுக்கரசி சரியான தேர்வு.
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் முன்னதாகவே மனசுக்குள் அசை போட்டு ஆட்டம் காட்டியவை. ரசனையுடன் படம் ஆக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் .
எடிட்டிங் டேபிளில் கத்திரி இல்லாமல் போச்சோ என்னவோ ,சில இடங்களில் போட்டிருக்கலாம் அருவாளை.!!
தெக்கித்தி சீமையை மண் வாசனையுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.












