‘வாரியர் ‘பட இயக்குநர் என்.லிங்குசாமி ,இவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வாங்கிய 1 கோடி ரூபாயைத் திருப்பித் தராத வழக்கில் அண்ணன் தம்பி இருவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்கள் வாங்கிய கடனுக்காக கொடுத்திருந்த ஒரு கோடி ரூபாய்க்கான செக் செல்லாமல் போய்விட்டது.
தங்களுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போகிறார்கள்.
இவர்களது சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம்