பிரச்னை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அனுதினமும் அதன் வழியாகத்தான் மனிதனின் பயணம் தொடங்குகிறது.என்றாலும் ,
உழைப்பு வீணடிக்கப்படக்கூடாது அல்லவா?
அப்படி வீணடிக்கப்பட்டதாக கருதி தான் பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னத்துடன் சீயான் விக்ரமுக்கு மனக்கசப்பு !
கேள்விப்பட்டதும் கஷ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் இன்னொரு ட்ரீம் ப்ராஜெக்ட்டான ‘ கோப்ரா ‘ படத்தின் முன்னெடுப்பு விழாக்களில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு வருகிறார்.
கோவையில் மாணவ மாணவியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பின்னர் விக்ரமின் மனதில் உற்சாகம் பெருக்கெடுத்தோடுகிறது .கோப்ராவில் மிகப்பெரிய சாதனையை இவர் செய்திருக்கிறார்.ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியாகும் கோப்ராவை ரெட் ஜெயண்ட் விநியோகம் செய்திருக்கிறது.