கோடிகளை காட்டிக் கொடுக்க ஆட்கள் தயாராக இருக்கிறபோது நாக்குட்டிக்கு கூட பிளாட் வாங்கித் தருவார்கள் நடிகர்கள் என்று சொல்கிற அளவுக்கு மாறிப்போயிருக்கிறது கோலிவுட் !
கூட்டுக்குடும்பம் கூட இல்லை. கணவன் ,மனைவி ,மகன் ,மகள் என அளவான அழகான குடும்பம் விஜய்க்கு.!
அப்பா,அம்மாவை தன் பங்களா பக்கமாக ஒண்டவிடமாட்டார் விஜய் என்று சொல்லுகிற அளவுக்கு பெற்றவர்களுடன் பிரச்னை .மனமுறிவு ,விரோதம்.!
தற்போது விஜய்க்கு சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. மற்ற நடிகர்களின் பங்களாக்களுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு ஆடம்பரமான நாகரீகமான பங்களா என சொல்லுகிறார்கள். அங்குதான் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார்.
தற்போது அவர் புதிதாக ஒரு பிளாட் வாங்கியிருக்கிறாராம். திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 34 கோடியில் புதிய பிளாட் .!
இந்த பிளாட் முழுக்க முழுக்க விஜய்யின் தனித்த பயன்பாட்டுக்கானதாம் !
இன்னொரு வியப்புக்குறியும் பக்கத்தில்.!
இதே தொகுப்பில் 34 கோடியில் ஒரு பிளாட் வாங்கியிருப்பவர் ஆர்யா.
விஜய் அளவுக்கு ஆர்யாவும் வளர்த்திருக்கிறார் என்பது பெருமைதானே.! தற்போது நயன்தாராவும் ஒரு பிளாட் தேடுகிறார்.