கேள்விப்பட்ட பெயராகத் தெரிகிறதல்லவா?
ஷர்வானந்த் . தெலுங்கில் பிரபலம் . தமிழுக்கு விருந்தாளி. காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் .
குறிப்பாக இயக்குனர் எம்..சரவணன் இயக்கத்தில் .சேரன் இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். வரவிருக்கிற தமிழ் ,தெலுங்கு இரு மொழிப்படமான ‘கணம் ‘படத்தில் ஷர்வானந்த் தான் நாயகன்.
ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழில் கணம் – தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம் என தயாராகியுள்ள இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், எம்.எஸ்..பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
டைம் ட்ராவல் படம். எமோஷனல் சயின்ஸ் ஃபிக்சன் படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கணம் திரைப்படத்தின்முன்னோட்டம் இங்கே …