திரை உலகில் காதல் என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.
பெரும்பாலும் அங்கே காதல் என்பது பொழுதுபோக்கு அயிட்டமாகிவிடுகிறது. சிலர்க்கு பூத்து ,மலர்ந்து உதிர்ந்து விடுகிறது.! இருவருமே அதை சுலபத்தில் கடந்து விடுகிறார்கள். அனுபவம் புதுமை.!
தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்- துஷாரா விஜயன் இருவரிடையே நடந்து கொண்டிருப்பது வெறும் நடிப்பா அல்லது காதலா?
நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தில்தான் அவர்கள் ஒன்றாக நடித்திருந்தார்கள். இதன் பிறகு இவர்கள் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பது டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்குகிற படத்தில்தான்.!
இந்த படம் லண்டனில் தயாராகிறது.
அமலாபால் நடிக்கிற இந்த படத்தில் துஷாரா விஜயன் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அழுத்தம் கொடுத்ததே கதாநாயகன் காளிதாஸ்தான் என்கிறார்கள்.
இது நட்பின் வெளிப்பாடா அல்லது அதையும் தாண்டிய புனிதமான காதலா ?
சொல்லுங்கப்பா ..வெட்டியா மண்டை காய விட்றாதீங்க