நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் டி.மதுராஜ் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில்
யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம்’ஷூ.”
இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு இடம் இல்லாத அளவுக்கு படக்குழுவின் சொந்த பந்தங்கள் அரங்கு முழுமையாக நிறைந்திருந்தார்கள்.
இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் நியாஷ் ,தயாரிப்பாளர் கார்த்திக்,ஜாக்குவார் தங்கம் , இயக்குநர் விருமாண்டி ,பெப்சி சிவா ,நடிகை ஷஞ்சிதா ஷெட்டி, நடிகை கோமல் ஷர்மா ஆகியோர் படத்தைப்பற்றி சுருக்கமாக பேசினார்கள் ,
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது……
“புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குநர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து இந்தப்படத்தை உருவாக்கியது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்தப்படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் “என்றார்.
படத்தின் இயக்குநர் கல்யாண் பேசியதாவது……
தயாரிப்பாளர் கடின உழைப்பைக் கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப்படத்தில் தொழில்நுட்பக்கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்தப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.
நக்கீரன் கோபால் பேசியதாவது……
இந்தப்படத்தின் கதை கரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வரக்காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காகப் போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்தத்திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்” என்றார்.