நாக்கு தள்ளிப்போச்சு லைகாவுக்கு.!
பொன்னியின் செல்வன் முன்னோட்ட விழாவுக்கான அழைப்பிதழில் சீனியாரிட்டி படி பெயர்களை போட்டு ஒரு அழைப்பிதழ் தயாரானது. அதில் உலக நாயகன் கமல்ஹாசனின் பெயரை முதலாவதாகவும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பெயரை இரண்டாவதாகவும் போட்டிருந்தார்கள்.
ரஜினியின் ரசிகர்கள் பொங்கி விட்டார்கள். போயஸ் தோட்டத்திலும் புகைச்சல் !
இந்த அளவுக்கு ரஜினி இறங்குவார் என எதிர்பார்த்திராத லைகாவுக்கு நெருக்கடி தரப்பட்டது. மறுநாள் விழா நடக்கப்போகிற நிலையில் ரஜினியே “மாத்திடுங்க” என்று சொன்னால் ..
மாற்றாமல் இருக்க முடியுமா?
லைகாவும் மணிரத்னமும் இணைந்து ரஜினியின் படத்தை தயாரிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிற நிலையில் மாற்றாமல் இருக்க முடியுமா?
ரஜினியின் பெயரை முதலிலும் கமலின் பெயரை அடுத்தபடியாகவும் போட்டு ஒரு டிவிட்டர் போட்டு விட்டார்கள்.
இந்த மாதிரியான பொய்யான மாயையில் சிக்காதவர் கமல்ஹாசன் என்றாலும் அது ஒரு வகையான இழுக்குத்தானே!
இதற்குத்தான் ஆசைப்படுகிறாரா ரஜினிகாந்த்?