கோடை வெயில் மாதிரி சூடேறிப் போயிருக்கிறார் சமந்தா.
என்ன காரணம்?
சுழன்றடிக்கிற ரூமர்ஸ்தான் காரணம் என்கிறது திரை வட்டாரம்.!
சித்தார்த்துடனான காதல் செய்திகள் வலம் வந்த காலத்தில் அவருக்கு தோல் நோய் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
சித்தார்த்துடனான காதல் முறிவுக்கு வந்த பின்னர் சரும நோய் பற்றிய தகவல்களும் படிப்படியாக மறைந்து கல்யாண செய்தியில் களை கட்டியது .
யார் கண்பட்டதோ திருமணமும் பின்னர் டைவர்ஸில் முடிய தற்போது மறுபடியும் உடல்நலம் பற்றிய செய்திகள் கொம்பேறி மூக்கன் மாதிரி உச்சத்தில்.!
சமந்தாவுக்கு கோபம் அக்கினி வளர்க்கிறது. இதற்கு தீர்வு என்ன?
‘யசோதா’ படத்துக்கான டீசர் வெளியீட்டு விழாவுக்கு சமந்தா வருவாரேயானால் விடை கிடைத்து விடும் என்கிறார்கள்.