சக்தி சவுந்தர்ராஜனின் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கிற படம் ‘கேப்டன்.’
ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறார் ஆர்யா. இவரது தலைமையில் செக்டர் 42 என்கிற வனப்பகுதிக்குள் ஒருவித தேடுதல் வேட்டை.
அந்த தேடுதலில் கண்டதென்ன,அதனுடைய விளைவுகள் என்ன ,என்பதுதான் கதை .’பிரடிடேட்டர் ‘என்கிற ஆங்கிலப்படத்தின் தழுவல்தான் இந்த கேப்டன் .
அடர்ந்த கானகம். சூரியன் அங்கு தரையில் விழுவதில்லை.அந்த அளவுக்கு விண்ணைத்தொடுகின்ற மரங்கள் நெருக்கமுடன்.! இந்த செக்டர் 42 பகுதிக்குள் சென்றவர்கள் திரும்பியதில்லை என்பது மறைந்திருக்கிற பயங்கரம். இதற்கான விடை கிடைத்ததா ?
ஆர்யா ,ஹரிஷ் உத்தமன் ,சிம்ரன் ,ஐஸ்வர்யா லட்சுமி ,காவ்யா ஷெட்டி ,என பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இசை இமான் .என பக்க மேளங்கள் பலமாக இருந்தும் பலனென்னவோ ஜீரோ வாக இருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து விட்டது இந்த படம்.
நடிப்பை பொருத்தவரை ஆர்யா ,சிம்ரன் ,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நமது கவனத்தை ஈர்க்கிறார்கள் .ஆனால் இந்த வகையான படத்துக்கு தேவைப்படுகிற விஎப் எக்ஸ் என்கிற உத்தி ஆக்கப்பூர்வமாக இல்லை. கார்ட்டூன் படங்களில் இருக்கிற நேர்த்தி படத்தில் சொல்லப்படுகிற மினார்ட்டரில் இல்லை.மினார்ட்டர் கிங் என்பது நல்ல கற்பனை .ஆனாலும் சரியாக உருவகப் படுத்தப்படவில்லை.
இமான் இசையில் ஒன்று கூட தேறவில்லை .
கேப்டன் கேரக்டரில் ஆர்யா சரியாக பிட் ஆகி இருக்கிற அளவுக்கு கதையும் காட்சிகளும் நம்மை கவரவில்லை.
ஏமாற்றம்.!