இந்திய இடதுசாரி பொதுவுடமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிஆர்வலர்.எழுத்தாளர். இவர் ஒரு வார இதழில் தொடர்ந்து எழுதிய நவீனம்தான் ‘வேள்பாரி’பறம்புமலை நாயகன்.
வேள்பாரியை நாயகனாக கொண்டு தாமும் ஏன் ஒரு வரலாற்று காவியத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்கிற உந்துதல் ஷங்கருக்கு இருந்திருக்கிறது.
இதே நேரத்தில் நடிகர் தனுஷுக்கு வேள்பாரியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததையும் நினைவு கொள்ள வேண்டும். புதினமான வேள்பாரியை படமாக்குகிற உரிமையை தனுஷ் பெற்றிருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.
அண்மையில் கல்கியின் புதினமான பொன்னியின் செல்வன் திரைப்பட முன்னோட்ட விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
மணிரத்னம் இயக்கியிருக்கிற திரையோவியம்.
ஷங்கருக்கு வரலாற்று படைப்பை திரைக்கு கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை இருப்பதாக சொல்லுவார்கள். அது இப்போது அவருக்கு சாதகமான நிலையை உருவாக்கியிருப்பதாக சொல்லலாம் ..
ஷங்கர் -எழுத்தாளர் சு.வெங்கடேசன் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.அதில் விரிவாக இருதரப்பினரும் பேசியிருக்கிறார்கள். வேள்பாரியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டிய தனுஷும் அவர்களது ஆலோசனையில் கலந்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள்.
இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் முயற்சி தமிழ்த்திரைக்கு பெருமை தருவதாக இருக்கிறது.ஆனால் கார்ட்டூன் வடிவில் வருமேயானால் அது வேள்பாரியின் சிறப்புக்கு ஊனம் விளைவித்ததாகிவிடும்.இதை பதிவு செய்வதற்கு காரணம் இருக்கிறது.
பட்ஜெட் 1000 கோடி என சொல்லப்படுகிறது. தமிழ்த்திரை உலகில் புதிய அத்தியாயமாக அமையும்.