ஒதுங்கியிருப்பது போலிருந்தாலும் அவருக்கென ஒரு மரியாதை மங்கியதில்லை.மாண்பும் குறையவில்லை. அவர்தான் ராஜ்கிரண்.
அவரது வீட்டுக்குள் யாரும் எளிதில் சென்று விடமுடியாது. கேட் திறப்பதில்லை. முகம் பார்க்காமல் கதவிடுக்கில் கடிதமோ அழைப்பிதழோ நுழைத்து விடவேண்டியதுதான். முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை. வரவேற்பு அறையில் வைத்து பேசுவார்.அங்கிருக்கிற சாயிபாபாவை நாமும் தரிசனம் செய்யமுடியும் .
ஒரு இசுலாமியர் இல்லத்தில் பார்க்க முடியாதவை கடவுளர்களின் படங்கள். ஆனால் ராஜ்கிரண் இல்லம் விதிவிலக்கு.
தற்போது எப்படி என்பது தெரியாது. உள்ளேயே போக முடியாது என்கிறபோது எதை நாம் பார்க்க முடியும்?
ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா.
இவர் சிரிப்பு நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். ராஜ்கிரணின் எதிர்ப்பையும் மீறி.! இது பேஸ்புக் காதலாம். முனீஸ்ராஜா நடிகர் சண்முகராஜாவின் தம்பி.!
வர் சன் டிவியில் திருமுருகன் எழுதி மற்றும் இயக்கி ஒளிபரப்பான நாதஸ்வரம் என்கின்ற தொடரில் காமெடி நடிகராக நடித்த நடிகர் முனீஸ் ராஜா என்பவரை பேஸ்புக் மூலமாக காதலித்திருக்கிறார். முனீஸ் ராஜா பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜாவின் தம்பி.
இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லையாம். இதனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள் என்கிறார்கள்.ராஜ்கிரணின் எதிர்ப்பை மீறி நடந்து விட்ட கல்யாணம் .
ராஜ்கிரண் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.!