“நம் வீட்டில் ஒருபெண் இருந்தால் பக்கத்து வீட்டுப் பையனை நம்பக்கூடாது ” என்கிற பொதுப்புத்தியில் எடுக்கப்பட்டிருக்கிற படம்தான் ‘நாட் ரீச்சபில் ‘!
கதையென்ன ?
அடுத்தடுத்து இரண்டு இளம் பெண்கள் கொலையாகிறார்கள். ஒருத்தி காணாமல் போகிறாள். கொலையாளி யார்,காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கிறது காவல்துறை.! .
விசாரணை அதிகாரிகளான விஷ்வா,சுபா இருவரும் அவரவர் பாணியில் விசாரிக்கிறார்கள். விஷ்வா சாப்ட் என்றால் சுபா காரம். இது கதைக்கு சுவாரசியம் கூட்டவே செய்கிறது. இதனால் மனதில் பதிகிறார்கள்.
சாய் தன்யாவுக்கு மனநிலை சரியில்லை. எதனால் அவருக்கு இந்த பாதிப்பு? முடிவில் சரியான விடை கிடைக்கிறது. நியாயமாகவும் இருக்கிறது.
ஹரிதாஸ்ரீ காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி ஆகியோரது கேரக்டர்கள் கதையோட்டத்துக்கு துணையாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருப்பதோடு எடிட்டிங் வேலையையும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம்.
கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம் கதாபாத்திரங்கள் ஆகியனவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார்.