ஸ்ரீ தக்ஸா இன்னோவேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் ‘கமர கட்டு ‘.இதில்,யுவன்,ஸ்ரீராம்,ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க,மனிஷாஜித்,டெல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இவர்களுடன்,வாசு விக்ரம்,சேத்தன்,கிரேன்மனோகர் பாலாசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கி வரும் ராம்கி ராமகிருஷ்ணன் கூறியதாவது, இது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி யில் அடியெடுத்து வைக்கும் இரண்டு மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் நிகழ்வே இப்படத்தின் காதல் மற்றும் திகில் என பரபரப்பான கதையாக் கப்பட்டுள்ளது. ருத்ராட்சம் வடிவில் இருக்கும் ‘கமர்கட்டு’ என்ற இனிப்பு உருண்டையை கடித்து சாப்பிடுவதற்கு எவ்வளவு கடினமாக இருக்கிறதோ ,அதே மாதிரி வாழ்க்கையில் சில நல்ல விசயங்களை அடைய கடினமான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதை சொல்லும் படமாக இருக்கும் .இப்படம் முழுவதும் திருவண்ணாமலை பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.பாலா சிங் இதில் திருவண்ணாமலை சிதத ராக நடித்துள்ளார் என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ,ஸ்ரீதர்,ஆர்.கவனிக்க,பைசல் இசையமைத்துள்ளார்.