ட்ராமா, இத்திரைப்படத்தை அஜு கிழுமலா இயக்கியிருக்கிறார். இதில் கிஷோர், சார்லி, ஜெய் பாலா, காவ்யா பெல்லு, நகுலன் வின்சென்ட், மரியா பிரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘வைப் 3’ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை சசிகலா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தினை போன்றே இப்படமும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறது.?
ஒரே ஷாட்டில் எடுக்கவேண்டும் என்கிற உந்துதல் இந்த படத்தை பாதாளத்தில் தள்ளி இருக்கிறது .கதை என்ன?
போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் நியாயமானவர். அவருடன் வேலைப் பார்க்கும் ஹெட் கான்ஸ்டபிள் சார்லி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
கொலையை கண்டுபிடிக்க, போலீஸ் டி. எஸ். பி. கிஷோர் வருகிறார். அவர் கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என்ன? இது தான் ‘ட்ராமா’
ஆரம்ப பள்ளி மாணவன் ஆலமரம் பற்றி கட்டுரை எழுதுவதைப் போல இருக்கிறது திரைக்கதையும்,படம் எடுத்ததும்.!
ஆர்வம் இருந்தளவுக்கு காட்சிகள் எடுக்கப்படவில்லை.. . ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்ததை தவிர்த்துவிட்டு, சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தால் இந்தப்படத்திற்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கலாம்.
ஏட்டய்யா ஸ்டேஷனலில் கொலையாகி இருக்கிற நிலையில் சக காவலர்கள் ஏனோ தானோவென இயங்குகிறார்கள். பலவீனமாக இருக்கிறது.
எந்த சாமி புண்ணியமோ கிளைமாக்ஸ் சூடாக இருக்கிறது. ‘சீட்டிங் ஸ்கிரீன்ப்ளே’ என்றாலும் பாராட்டலாம். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இந்தப்படம் வெற்றி தான்.
படத்தில் நடித்த சார்லி, கிஷோர், ஜெய்பாலா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ் ஆகியோர் நன்றாக நடித்து இருக்கிறார்கள். நகுலன் வின்சென்ட் கதாபாத்திரமும், அவர் நடிக்கும் விதமும் சற்றே எரிச்சலை ஏற்படுத்துகிறது.
‘ட்ராமா’ அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட படம்!