நடிகைகளில் எல்லோரும் கவர்ச்சி காட்டுகிறார்கள் .என்றாலும் ராஷ்மிகாவின் கவர்ச்சிக்கு ஈடாக எவரது கவர்ச்சியும் எடுபடவில்லை. இறக்கமும் ,ஏற்றமும் அளவுடன் அமைந்து இருப்பதே காரணம்.!
பாலிவுட் பக்கம் பாய்ந்து இருப்பதால் பிற மொழிப்படங்களில் நடிப்பதற்கு அவ்வளவாக அம்மணி ஆசைப்படுவதில்லை.அலட்சியம்.!
சீயான் விக்ரமுக்கு எல்லா மொழிகளிலுமே பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்தியா முழுவது மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழுகிற உலக நாடுகளிலும் விக்ரமின் புகழ்க்கொடி பறந்து கொண்டிருக்கிறது.
இவரது படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.
என்னவாம் அவருக்கு?
விவரமாக பார்க்கலாம்.
விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.
இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை தமிழ் பிரபா. ஒளிப்பதிவு கிஷோர் குமார் .. ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை.
படத்தொகுப்பு செல்வா. சண்டைக் காட்சிகள் அன்பறிவு. நடனம் சாண்டி பாடல்கள் கபிலன், அறிவு, உமாதேவி
இந்தப்படத்தில் விக்ரமுக்கு இணையாக நடிப்பதற்கு ராஷ்மிகாமந்தனாவைக் கேட்டிருக்கிறார்கள் . படத்தின் கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போய் நடிக்கவும் ஒப்புக்கொண்டதாக சொல்கிறது முதல் தகவல் அறிக்கை.!
பிறகென்ன கேடு?
சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதிகள் ஆகியனவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை . இதனால் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதன்பின், பல நடிகைகளைப் பரிசீலித்து கடைசியில் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.