பிரபல இசை அமைப்பாளர்கள் என்கிற வரிசையில் இணைய விருக்கிற ஜஸ்டின் பிரபாகரன் திருமணம் சிறப்புடன் நடந்தது
ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்த படங்களில் பண்ணையாரும் பத்மினியும் ,டியர் காம்ரேட் மிகவும் குறிப்பிடத்தகுந்தது.
ஜஸ்டின் பிரபாகரன்-கரோலின் சூசன்னா திருமணம் மதுரையில் உள்ள இம்மானுவேல் சர்ச்சில் நடந்தது. எல்லிஸ் நகரில் இருக்கிற எம்.ஆர்.சி மகாலில் வரவேற்பு நடந்தது.
நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர் இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பாடலாசிரியர் ,வசனகர்த்தா மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.