பொன்னியின் செல்வனின் அலை பொங்கி வருகிற நேரம் என்பதால் பல படங்கள் ஒதுங்கியே நிற்கின்றன.
இந்த நேரத்தில் துணிச்சலுடன் பிரஸ் ஷோ போட்டு தைரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் பிஸ்தா படக்குழுவினர்.
துணிச்சல் ,தைரியத்துக்கு தகுந்த மாதிரி படம் இருக்கிறதா?கதை என்ன?
பெண்ணின் காதலுக்கு எதிராக கட்டாயக் கல்யாணம் நடக்கிறதா ?
மெட்ரோ சிரிஷ் சேவை மையத்தில் சொன்னால் போதும் .கல்யாணப்பெண்ணை கடத்திக்கொண்டு போய் காதலனுடன் சேர்த்து வைத்து விடுவார்கள்.இது கதை. இந்த சிரிஷ்க்கு கல்யாணம் நடக்காமல்போவதற்கு கிளைமாக்ஸ் வரை தடைகளுடன் காமடியாக நடத்துகிறேன் பேர்வழி என்று படத்தை ஓட்டுகிறார்கள்.
மெட்ரோ சிரிஷ் ,சதிஷ் இருவரும் படம் முழுக்க வருகிறார்கள் .உருப்படியான நடிப்பு இருவரிடமும் இல்லை. அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொள் என்று எந்த புண்ணியவான் சொன்னானோ ,தாடிக்குள் சிரிஷ் முக பாவம் மறைந்து கொள்கிறது.!
பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் நடித்த நேரத்தில் நாலு பேருக்கு நாலடியார் விளக்கம் சொல்லியிருக்கலாம் .அது தமிழுக்குப் பெருமை.
மிருதுளாமுரளி, தோழியாக நடித்திருக்கும் அருந்ததிநாயர் இருவரும் குடும்பக்கட்டுப்பாடு நாடகம் நடத்த பயன் பட்டிருக்கிறார்கள்.
சதீஷ், யோகிபாபு, லொள்ளுசபா சாமிநாதன்,செந்தில் இவர்கள் சிரிப்புக்காக வந்து போகிறவர்கள் .பிற்பாதி சுமாராக இருக்கிறது.
எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் படம் தெளிவாக இருக்கிறது.
இயக்குநர் ரமேஷ் பாரதி விதவை திருமணத்தை சொல்லுகிறார் கிளைமாக்சில் .! இந்த நல்ல காரியத்தைப் பார்க்க அவ்வ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமா என்ன ?
பிஸ்தா ….???
.