சென்னையில் உள்ள தரமணி பகுதியில் வசித்து வந்தவர் கார்பெண்டர் முனுசாமி ( 53) . இவர் சில மாதங்களுக்கு குடித்துவிட்டு போதையில் கார் ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார்.
விஷால் நடிப்பில் சூராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு யூனியனில் இருந்த வந்து சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை. தகவல் அறிந்த விஷால் அன்னாரின் மகன்கள் ஆகாஷ் 6 ஆம் வகுப்பு , சந்தோஷ் 3 ஆம் வகுப்பு ஆகியோர் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படிக்க விரும்பும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார்.