“ஏன்டா ,வெங்கலம் ! சிம் கார்டு மாத்தணும்னு வந்தா வம்பு பண்ணுவீங்களா ,வெளியே போக விடாம டோரை பூட்டிட்டு கஷ்டப்படுத்துவீங்களா ?” என்று உங்களின் மனசாட்சி இந்த செய்தியை படிச்சிட்டு கேட்டா நடிகை அன்னா ரேஷ்மா ராஜனின் மனம் குளிரும்.!
அலுவாவில் இருக்கிற ஒரு டெலி காம் கம்பெனிக்கு நடிகை சென்றிருக்கிறார். தனது செல் போனுக்கு டூப்ளிகேட் சிம் வேண்டும் என்று கேட்டதற்கு அங்கிருந்த நிறுவனத்தின் வேலையாள் தவறாக நடந்து கொண்டு பேசியிருக்கிறான் .
நடிகைக்கும் அந்த ஆளுக்கும் தகராறு வலுக்கவே நிறுவனத்தின் கதவை சாத்திக்கொண்டு விவகாரம் பண்ணியிருக்கிறார்கள்.
அத்தனையும் சகித்துக்கொண்ட நடிகை வெளியேறிய பிறகு போலீசில் புகார் செய்யவே பிரச்னை பெரிதாகி விட்டது.
அந்த நிறுவனத்தின் வேலையாள் அன்னா ரேஷ்மா ராஜனிடம் மன்னிப்பு கேட்க பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.
“அந்த ஆளின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதினாலேயே புகாரை வாபஸ் வாங்கினேன்”என்கிறார் நடிகை. நல்ல மனசு தாயி!