நடிகை சமந்தாவைப் பற்றிய வதந்தி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது.!இவருக்கு தோல் நோய் இருப்பதாகவும் அதனால் வெளியில் நடமாட பயப்படுகிறார் என்றும் கூறுகிறார்கள். இதே மாதிரியான நிலை சமந்தாவின் கல்யாணத்துக்கு முன்னரும் இருந்தது.பிறகு தீவிர சிகிச்சைகள் எடுத்துக்கொண்டதால் குணமாகியது என்கிறார்கள்.
தற்போது அதே தோல் நோய் மீண்டும் வந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் ,திரும்பினார் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை.இவரது நடிப்பில் ‘சாகுந்தலம்’ ‘யசோதா’ ஆகிய இரண்டு படங்களும் அப்படியே நிற்கின்றன.
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வருகிற தகவல்கள் சமந்தா தற்போது கோவை ஈஷா பவுண்டேஷனில் இருக்கிறார். அங்குள்ள சத்குரு பாதுகாப்பில் மனஅமைதி தேடி இருந்து வருகிறார் என்கிறார்கள்.
நலமுடன் திரும்பினால் சரி!