நடிகை நயன்தாரா. விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்தது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் , “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். நமது வேண்டுதல்களும், முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் உள்பட அனைத்தும் இணைந்து, நமக்கு 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஆனால் இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு பலரிடம் எழுந்துள்ளது.அதே சமயம் பலரையும் இவ்விவகாரம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்த குழந்தைகள் தத்தெடுக்கப் பட்டவையா அல்லது “வாடகை தாய்” மூலமாக குழந்தைகள் பெற்றுக் கொண்டனரா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர். எது எப்படியோ திருமணமாகி தற்போது தாயாகியிருக்கும் நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்