ஆள் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலில் ஓட்டக்கூடிய காரை கண்டுபிடித்த ஆற்றல் படைத்த ஆளுதான் விதார்த்.அப்படின்னா இந்த விஞ்ஞானியை இந்த நாடு எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? அட,இவர்தான் அந்த காரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்க வேண்டும்?
சும்மா கடேசியில் இன்டலிஜெண்ட் கொள்ளை கும்பலிடம் இருந்து தப்புவதற்காக கார் ஓடுது.!
படம் முழுக்க நாலு பேர் ஹெல்மெட் போட்டுக்கிட்டு கொலை கொள்ளை நடத்துறானுக. இவிங்களைப் பற்றியோ அந்த காரை பற்றியோ காவல் துறை கவலைப்படாமல் ஓசி பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கு..
புரிதல் இல்லாமல் கதையை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
விதார்த் நாயகன்.இவரது அப்பா சார்லி.வில்லன் வம்சி கிருஷ்ணா.இந்த நால்வரில் சார்லியை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் .அவரது தியாகம் மறைபொருளாக இருப்பதால் பெரிதாகப்பேசப்படலை.
நாயகி ஷிரதா ராவ்.அழகு.கொஞ்சுவதற்கு பயன் பட்டிருக்கிறார். அழுத்தமான லிப் லாக் இல்லை என்றாலும் அதற்கு ஜூஸ் குடிப்பது என்கிற பெயர் கிக் ஏற்றுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் வம்சிகிருஷ்ணா வழக்கம்போல !
கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவு . அஸ்வின்ஹேமந்த் இசை .விஜய்வேலுக்குட்டி படத்தொகுப்பு என பக்கத்துணையுடன் களம் இறங்கி இருக்கிற இயக்குநர் இயக்குநர் கே.எல்.கண்ணன் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
நாமும் கஷ்டப்படுகிறோம்.