ஆயுளை மீட்டு எடுக்கிறவன் என்பது சஞ்ஜீவன் என்பதன் பொருள்.!
அண்மையில் வெளியான படங்களில் மிக மிக மிகவும் ஆறுதலாக இருக்கிறது இந்தப்படம்.எழுதி இயக்கியுள்ள மணிசேகருக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம் ,வாழ்த்துகள்.!ஒரு அறிமுக இயக்குநரிடம் இவ்வளவு நேர்த்தியான ,காமெடியான படத்தை எதிர்பார்க்கவில்லை.
இறுதிக் காட்சியில் நாயகனை கொன்று விட்டு எதற்கு நியாயம் சேர்க்க பார்த்திருக்கிறார் என்பது புரியவில்லை.
கலகலவென காமெடியுடன் கதை பர பர க்கிறது !ஒவ்வொரு கேரக்டரையும் அதற்கேற்ற பாணியில் இயக்குநர் கொண்டு சென்றிருக்கிறார். முன்னணி இயக்குநர் ஒருவரது ஸ்டைல் இருக்கிறது.
ஸ்னுக்கர் என்கிற விளையாட்டு முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இதை எந்தளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கையாண்டிருக்கிறார்கள்.அதுவும் பரபரப்பாக இருக்கிறது.நடிகர் பிரசன்னாவின் தம்பி கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவாளர் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. திறமைசாலி .படத்தில் கைவண்ணம் தெரிகிறது.
அறிமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகன் ,இவரது நண்பர்களாக ஷிவ் நிஷாந்த் ,விமல் ராஜா ,சத்யா ஆகியோர் அளவோடு நடித்து கதையில் துடிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள் .அந்த காலத்திய பாலைவனச் சோலை நினைவுக்கு வருகிறது.
நாயகியாக திவ்யாதுரைசாமி நடித்திருக்கிறார்.
தனுஜ்மேனனின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரியாக இருக்கிறது.
சிபுநீலின் படத்தொகுப்பு அளவு.
போதையில் கார் ஓட்டுதல் எவ்வளவு பெரிய இழப்பினைக்கொடுக்கும் என்பதை இயக்குநர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
பார்க்கலாம் படத்தை.!மார்க்கு. 3.5 / 5