வாரிசு படத்தின் காட்சிகள் அடுத்தடுத்து லீக் ஆவதால் படக்குழுவினர் செம காண்டில் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் தில் ராஜுக்கு இன்னொரு வகையிலும் பிரச்னை .!
சொந்த மாநிலத்தில் அதாவது தெலுங்கு சீமையில் செம சிக்கல் .!!
தமிழைப் பொறுத்த வரை வாரிசு அள்ளிக்குவித்துவிடும் என்கிற நம்பிக்கை அவருக்கு அமோகமாக இருக்கு.
ஆனால் தெலுங்கு வாரிசுடு கிள்ளியாவது கொடுக்குமா என்கிற சந்தேகம் வந்திருக்கு. தெலுங்கு ஆடியன்ஸுக்கு விஜய் நன்கு தெரிந்தவர்தான் என்றாலும் 100 கோடி கலெக்சன் கொடுக்குமா என்கிற சந்தேகம் தில் ராஜுக்கு வந்திருக்கு.
சங்கராந்தி சீசனில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஷின் ஆதி புருஷ் வரப்போகுது.
சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவும் வர்றார் .என்.டி ,ஆர் .பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டியும் வர்றாராம்.
இப்படி மும்முனை தாக்குதல் .! எப்படி வாரிசுடு தாங்கும்?
தெலுங்கு ஆடியன்ஸ் சொந்த மாநிலத்து நடிகர்களின் படங்களையே பார்க்க விரும்புவார்கள் .இவர்களை தாண்டித்தான் அடுத்த மாநிலத்து ஹீரோக்களுக்கு மரியாதை.
இப்படியிருக்கிறபோது வாரிசுடு ரிலீஸ் தேதியை மாத்த முடியுமா ?தமிழ் வாரிசு வெளியாகும் தேதியில்தானே தெலுங்கு படத்தையும் வெளியிட வேண்டும்?
வாரிசுடு மத்த தெலுங்கு படங்களைவிட சூப்பர் ஹிட் அடிச்சா டபிள் தீபாவளிதான் தில் ராஜுக்கு.!