தமிழ்த்திரைப்பட தயாரிப்பளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியதாவது,
ந டிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே…
சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி,பொது வெளியிலும் சரி – மிகுந்த சந்தேகங்களை எழுப்புவதாகஅமைந்துள்ளது. சந்தேகங்கள் மட்டுமல்ல, ஆபத்தானவையாகவும்கூட உள்ளன.
நடிகர் சங்கத்தைப் பிடித்தாயிற்று. அடுத்தது தயாரிப்பாளர்சங்கத்தையும் கைப்பற்றுவேன் என்று சமீபத்தில் நீங்கள் பேட்டிஅளித்துள்ளீர்கள். மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் பற்றியும்அவதூறாகப் பேசியுள்ளீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி என்றமுறையில் உங்களுக்கு சில கேள்விகள்…
நீங்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல… நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர். என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளி வீசி, தினமும்மீடியாவின் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கடைசி நேரவாக்குப்பதிவின்போது நடக்காத ஒரு அடிதடியை நடந்ததாக சீன்கிரியேட் செய்து, ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்தவர். ஒருஅமைப்பின் வலிமையான பொறுப்பில் உள்ள நீங்கள், சினிமாவுக்குஅடிப்படையாக விளங்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி,அவர்களுக்கான சங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசலாமா? அந்தஅதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தயாரிப்பாளர் சங்கத்தில்உறுப்பினராகவே இருந்தாலும், இப்படிப் பேசுவது சரிதானா?
நடிகர் சங்க நிர்வாகம் சரியில்லை என்று பிரச்சாரம் செய்து, அந்தசங்கத்தில் போய் உட்கார்ந்துவிட்டீர்கள். இப்போது தயாரிப்பாளர்சங்கம் சரியில்லை… அதனால் அதையும் கைப்பற்றுவேன்என்கிறீர்கள்.
அடுத்து? தமிழ்நாட்டு நிர்வாகம் சரியில்லை. எனவே அந்தஅதிகாரத்தையும் கைப்பற்றுவேன் என்று கூறுவீர்களோ? யார்கண்டது… உங்கள் நோக்கம் அதுவாகவும் கூட இருக்கலாம்.அதற்காகத்தானே தேவி அறக்கட்டளை மூலம் கல்வி உதவிகள்,நலிந்தவர்களுக்கான உதவிகள், ரசிகர் மன்றங்களை உசுப்பேற்றுதல்போன்றவை நடக்கிறதோ என்ற ஆழமான சந்தேகத்தைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர் சங்கத்தை, தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தை, ஏன் தமிழ் நாட்டையே ஆளும் ஆசைஉங்களுக்கு இருக்கலாம். தப்பில்லை. ஆனால் இம்மியளவுக்காகதமிழ் உணர்வு இருக்கிறதா உங்களுக்கு?
தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்ததை இப்போது ‘சௌத்இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்று மாற்றியிருக்கிறீர்கள்.அட, அந்த சீல் கூட ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’என்றே இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.
நீங்கள் பதவிக்கு வரும்போது என்ன கூறி வந்தீர்கள்? பல கோடி பேர்மதிக்கும், போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன கூறினார்உங்களிடம்? 12 கோடி மக்களின் ஏகப் பிரதிநிதி தமிழக முதல்வர்மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்ன விரும்பினார்?
நடிகர் சங்கத்தில் யார் பதவிக்கு வந்தாலும் முதல்வேலையாகதென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’என்று மாற்ற வேண்டும் என்றுதானே கூறினார்கள்.
நீங்கள் செய்திருப்பதென்ன? ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்றதமிழ்ப் பெயர் கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தீர்மானித்துஅதை ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்றுமாற்றியிருக்கிறீர்களே… இது எத்தனை பெரிய தமிழர் விரோதப்போக்கு… அயோக்கியத்தனம்!
திருட்டு வீடியோவை நீங்களே ஒழித்துவிடுவேன் என்று முழங்கிகளமிறங்கினீர்களே… அது ஒவ்வொரு முறையும் உங்கள் படங்கள்ரிலீசாகும் முன்பு, பின்பு மட்டும்தானா? மற்றவர்களின் படங்களின்திருட்டு வீடியோ எங்கு ஓடினாலும் கவலையில்லையா?
சரி, நீங்க திருட்டு வீடியோவைத் தடுக்க வேணாம்… அதைதயாரிப்பாளர் சங்கம் பார்த்துக் கொள்ளும். ஆனால் அப்படிதயாரிப்பாளர் சங்கம் உருப்படியாக மேற்கொண்ட திருட்டு வீடியோஒழிப்புக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
பல லட்சம் செலவழித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு எஸ்தாணு திருட்டு வீடியோவை ஒழிக்க உயர்நீதிமன்ற ஆணைப் பெற்று,டெல்லி வரை போனார். அவர் தனியாகத்தான் போராடவேண்டியிருந்தது. கேட்டால் அது அவர் படம் என்று ஒதுங்கினீர்கள்.அவரோடு கைகோர்த்து அத்தனைப் பேரும் களமிறங்கியிருந்தால்இன்று திருட்டு வீடியோ திருடர்கள் துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடியிருப்பார்கள். ஆனால் உங்கள் குறி,தயாரிப்பாளர் சங்கப் பதவிதானே!
எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது விஷால். மீடியா வெளிச்சம்நடிகர்கள் கண்களை மறைத்ததால் நீங்கள் நடிகர் சங்கத்தைப்பிடித்திருக்கலாம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம்… உங்கள் கபடத்தைவேரறுத்துவிடும். எச்சரிக்கிறேன்.
தயாரிப்பாளர் சங்கத்தை குறை சொல்ற நீங்க தயாரிப்பாளர்களுக்குஎந்த வகையில் பயனுள்ளவராய் இருந்திருக்கிறீர்கள்?
சாடிலைட் ரைட்ஸ் ரூ 10 கோடி போன காலகட்டத்தில் நீங்கள் 7கோடி சம்பளம் கேட்டீர்கள். ஆனால் இப்போது… எந்தப் படத்துக்குசாட்டிலைட் பிஸினஸ் ஆகிறது? 2 கோடி, 3 கோடி என்கிறார்கள்.ஆனால் நீங்களோ இன்னும் அதே 7 கோடியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
பாலிவுட்டில் இப்போது ஹீரோக்கள் பர்சன்டேஜ் அடிப்படையில் படம்பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தயாரிப்பாளரின் லாபநஷ்டத்தில் பங்கேற்க வந்துவிட்டார்கள். நீங்களும் இதற்குத் தயாரா?
படம் ஹிட்டடித்தாலும் ப்ளாப் ஆனாலும் உங்களுக்குப் படம்கிடைத்துவிடுகிறது. ஆனால் தயாரிப்பாளர் நிலை, அதோ கதிதானே.
வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆளமுயற்சிக்காதீர்கள். இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள்தமிழ் ரசிகர்களும், தமிழக மக்களும். தமிழக அரசு எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டுதான் உள்ளது!












