தனக்கு சேருகிற கூட்டம் உண்மையான கூட்டம் என்று எவனொருவன் நம்புகிறானோ ,அவனால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது அரசியல் அறிவு.
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு சேர்ந்த கூட்டம் வேறு. அதிகாரபூர்வமாக ஏற்பட்ட விளைவினால் ஏற்பட்ட அமோக விளைச்சல் அது. பிரிந்து வந்து விட்ட பெரும் கூட்டம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெரும் கூட்டம் கூடியது .ஆனால் விளைவு ? தெரிந்த ஒன்றுதான்.!
ஆந்திரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உடன் பிறப்பு பவன் கல்யாண்.இவரது கட்சியின் பெயர் ஜன சேனா கட்சி . மக்கள் வெள்ளமென திரண்டாலும் அரசியலில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.
ஆந்திராவின் முதல்வர் ஆசனத்தில் அமர்ந்து விடவேண்டுமென்பது பவன் கல்யாணின் தணியாத ஆசை.!
அதற்காக பல வகைகளில் பாடு பட்டு வருகிறார். பிஜேபியின் ஆதரவுடன் ஆந்திராவின் முதல்வர் ஆக வேண்டும் என காய் நகர்த்துகிறார்.
இவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது வெளியேறக்கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அரசியல் கூட்டம் நடத்த இயலாமல் போய் விட்டது.
இதனால் ஆடசியில் இருக்கிற ஒய் எஸ் ஆர் சி கடசி தலைவர்களை சகட்டு மேனிக்கு தரக்குறைவாக தித்தித்த தீர்த்து விட்டார் பவன் கல்யாண்.
செருப்பை தூக்கிக்காட்டி பேசியிருக்கிறார்.!
“நீங்கள் யூஸ்லெஸ் பெல்லோவ்ஸ் !இடியட்ஸ் ! உங்களின் கழுத்தை நெரிக்க வேண்டும்,செருப்பால் அடிக்க வேண்டும்.பல்லை உடைக்க வேண்டும் “என்று அநாகரீகமாக பேசியிருக்கிறார்.
ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அணிகிற சப்பல் விலை 6 ஆயிரம்.! லண்டனில் தயாரிக்கப்பட்டது.