ஒரே இந்தியா,ஒரே பைப் லைன் !
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரே பைப் லைன் சிஸ்டத்தில் குடிதண்ணீர் விநியோகம் என்பது இதன் நோக்கம்.!
அடடே …சூப்பரா இருக்கே ,இந்த சிஸ்டம் வந்தா நாட்டில குடிதண்ணீருக்கு பஞ்சமே வராதுன்னு நினைக்கிறீங்களா ?
அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க, இந்த பைப் லைன் திட்டத்தின் மூளையே சைனாதான்.! உலகத்துக்கு கொரானாவை சப்ளை பண்ணின நாடு! இப்படி இருக்கும்போது எப்படி நாட்டுக்கு நல்லது நடக்கும்? மொத்த நாடே குடிதண்ணீர் கிடைக்காம சுருண்டு போகும் விதமாக ஸ்கீம் போட்டுருக்காய்ங்க.!
வாட்டர் பாட்டில் தண்ணீர் குடிக்கிறதால எவ்வளவு பெரிய ஆபத்து ,நோய் வருது,அதனால வருசத்துக்கு எத்தனை லட்சம் குழந்தைகள் சாகுறாங்க என்பது திரையில் கதையாக விரிஞ்சி ,நாட்டு நலனுக்காக பாடுபட்ட தெருக்கூத்து கலைஞன் உளவாளியாக இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பாடுபட்டான் என்பதை சொல்லிட்டு கடைசியில் இந்திய அரசாங்க அதிகாரிகள் அவனை எப்படி தேசத்துரோகியாக சித்தரிக்கிறாய்ங்க …..ஆபத்து அந்நியனால மட்டுமில்ல ,இந்தியனாலேயும் இருக்குங்கிறத மித்ரன் போல்டா சொல்லிருக்கார். (மூச்சு வீட்டுக்குங்க.)
கார்த்தி ரெட்டை வேஷம்.முற்பாதியில் இளையவர் போலீஸ் அதிகாரி.பிற்பாதியில் முதியவர் சர்தார் .ரெண்டிலும் அவரது பெர்பாமென்ஸ் சூப்பர். விருமன் ,பொன்னியின் செல்வன் ,என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவருக்கு இந்த சர்தார் கிடைச்சிருக்கு.!
ராசி கன்னா ,ரஷிசா விஜயன் இந்த ரெண்டு கதாநாயகியரில் எனக்கென்னவோ ர.விஜயன்தான் பிடித்தமான நாயகியா தெரியிறாங்க. சதைப்பிடிப்பா அழகா இருக்காங்க. ராசி கன்னாவுக்கு முக்கியமான கேரக்டர்னாலும் அவரால முடிஞ்சதை செஞ்சிருக்கார்னுதான் சொல்லலாம். அடுத்து முனீஸ்காந்த் .சித்தப்பா கேரக்டர். மனசில நிக்கிறார்.
லைலா …நல்ல நடிகை. சரியான கேரக்டர். அமைதியா வந்து சாதனையான வேலையை செஞ்சாலும் நல்ல சாவு கிடைக்கல. கொலை செஞ்சு கடல்ல வீசிடுராய்ங்க. நல்ல நடிப்பு.
டைரக்டர் மித்ரன் ஹை கிளாஸ் ஆடியன்ஸ மனசில வச்சிக்கிட்டு ஸ்கிரீன் பிளே பண்ணுவாரு. அது இந்த படத்துக்கு கொஞ்சம் இடைஞ்சலா இருக்கு.
ஜிவி பிரகாஷ் மியூசிக் .தெருக்கூத்து பாடல் மனசில நிக்கிது.ஆனா ஹீரோயின்ஸ் பேசுற இடத்தில கேட்கவிடாம பின்னணி இசை அமுக்கிடுது ப்ரோ !
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ,ஆர்ட் டைரக்டர் கதிர் இந்த ரெண்டு ஜாம்பவாய்ங்களும் படத்துக்கு பில்லர்ஸ் . குறிப்பா கதிர் ப்ரோவுக்கு அவார்ட் கொடுக்கணும்.கொடுப்பாய்ங்களா
ஒரே இந்தியா ,ஒன் பைப் லைன்ல இருக்கிற ஆபத்தை தைரியமா சொல்லிருக்காய்ங்க. வாட்டர் கம்பெனிக்காரய்ங்க கேஸ் பி-போடாம இருந்தா சரி.
பார்க்கலாம் சர்தாரை.!