கதையும் நகைச் சுவையும் கலந்து கட்டி படம் பண்ணுவதில் சிவகார்த்திகேயன் கெட்டி. அதனூடே கொஞ்சம் கருத்தும் சொல்லுவார் எஸ்.கே.!
அது பிரின்ஸ் படத்தில் இருக்கா?
இயக்குநர் அனுதீப் அண்டை மாநிலம். நம்ம டேஸ்ட்டுக்கு வந்திருக்காரா ? பார்க்கலாம்.!
சத்யராஜ் சாதி மறுப்பாளர். சொந்த தங்கை மகனை இவரது மகள் திருமணம் செய்து கொண்டதால் மகளுடன் பேசுவதில்லை. மகன் சிவகார்த்திகேயன் வெளிநாட்டுப்பெண்ணை காதலிக்கிறான் என்பதைக் கேட்டதும் மகிழ்ச்சி .
ஆனால் அவள் இங்கிலாந்துப் பெண் என்று தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கிறார் சத்யராஜ்.
ஏன் எதிர்க்கிறார் என்பதை சிரிப்பும் சீரியசுமாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் அனுதீப் .பிரின்ஸ் படம் சறுக்கியதா ,சக்ஸஸ் கொடுத்ததா ?
ஜாலிலோ ஜிம்கானா என்று ஆட்டம் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.பைட் .டான்ஸ் என அதகளம்.உற்சாகம் நடிப்பில்.!
உக்ரனை சேர்ந்த மரியா சொந்த நாட்டில் நடக்கிற யுத்தம் மறந்து நடித்திருக்கிறார். ஃ பாரின் பெண்ணல்லவா ,டான்ஸ் சிறப்பாகவே இருக்கிறது.
சத்யராஜ் சாதி மறுப்பாளர். உயர்ந்த எண்ணங்கள் .ஆனால் அதற்கேற்ப அந்த கேரக்டர் அமைந்திருக்கிறதா ?மடார்ன்னு கீழே தள்ளிட்டாரே நயினா !!
ஸ்பெசல் அப்பியரன்ஸ் சூரி. சொதப்பல் !ஆனந்தராஜ் காமடி அசல்.! பிரேம்ஜி பரிதாபம்.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
மனோஜ்பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவு . காட்சிகள் பளிச்!
சிவகார்த்திகேயன் ,சத்யராஜ் இருவரையும் வைத்து சிறப்புத் தீபாவளி கொண்டாடியிருக்கலாம்.