தமிழ்த்திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வரும் யோகிபாபுவுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து யோகி பாபு தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தைபிறந்தது.அந்த குழந்தைக்கு விசாகன் என்று பெயரிட்டனர்
விசாகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், தீபாவளியன்று இரண்டாவது முறையாக யோகி பாபு – மஞ்சு தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
யோகிபாபுவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.