தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் வாரிசு. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க,இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் 2 பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது . இப்படத்தின் முதல் பாடல் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியான நிலையில்,,இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் லீக்கானது . ‘ரஞ்சிதமே’ எனது தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்கிறார்கள்
ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து பல காட்சிகள் லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், ரஞ்சிதமே பாடலும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பாடலை நீக்கும் முயற்சியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் இப்பட நிறுவனம் விஜய்யின் வாரிசு படத்தின் புதிய போஸடரை இன்று வெளியிட்டுள்ளது.இப்பட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.