தமிழ்த்திரையுலகில் கிட்டத்தட்ட 7வருடங்களாக காதலர்களாக வலம்வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஒரு வழியாக கடந்த ஜூன் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர் திருமணத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மேலும் தங்களது திருமணத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டு கணிசமாக காசும் பார்த்து ச நடிகர் நடிகைகளை பொறாமைப்படவும் வைத்தனர். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் ஆன 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியிலும் தள்ளினர்
வாடகை தாய் மூலம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் இரட்டை குழந்தை பெற்றதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த கடும் சர்ச்சைகளும் எழுந்தது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இது குறித்த சர்ச்சைகளுக்கு விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் உரிய விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத நயன் விக்கி ஜோடி தங்களது இரட்டை குழந்தைகளுடன் ஆனந்தமாக செலவிட்டு வந்தனர் இது குறித்த புகைப்படங்களையம் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா ஆகிய இருவரும் தங்களுடைய இரட்டை குழந்தைகளை கையில் வைத்து கொண்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தளங்களில் வைரலாகி வருகிறது.