தீபாவளிக்கு வந்த படங்களில் வசூலில் முன்னணியில் நிற்பது சர்தார் .
விமர்சகர்களால் பாராட்டுப் பெற்ற இந்தப்படம் மக்களாலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.
அண்மையில் வெற்றி விழாவும் நடத்தி விட்டார்கள்.
சர்தார் வெற்றிக்கு பக்க துணையாக விநியோகத்தில் ரெட் ஜெயண்ட் நின்றது.
இதற்காக அண்மையில் கார்த்தி உள்பட படக்குழுவினர் சிலர் ரெட்ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின்,செண்பகமூர்த்தி இருவரையும் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.