சிரிப்பு நடிகர் என்றால் அவரை ஏளனமாகப்பார்க்கிற நிலையை மாற்றியவர்கள் கலைவாணர் என்.எஸ்.கே., டணால் தங்கவேலு ,நாகேஷ் ஆகியோரை சொல்லலாம்.
ஆனாலும் பின்னர் வந்து புகழ் பெற்ற சில நடிகர்கள் மற்ற சிரிப்பு நடிகர்களை தங்களுக்கு கீழாக அடக்கி வைத்துக் கொண்டார்கள் .
அவர்களில் ஒருவர் நடிகர் முத்துக்காளை.!
அவர் முதுநிலை பட்டதாரி.!!
அவர் 6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடுகிறார் காமெடி நடிகர் முத்துக்காளை!
இவர் இளங்கலை தமிழ் இலக்கியம் (B.Lit) இரண்டாம் ஆண்டு தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ஆல் பாஸ் ஆகியுள்ளார்!
‘ஆல்கஹால் அனானிமஸ்’ என்ற ‘ஏஏ’ அமைப்பில் இணைந்து, கடந்த 5′ வருடங்களாக குடி பழக்கத்தை விட்டு விட்டு, குடியில்லாத வாழ்க்கையை மகிழ்சியாக 6’ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் முத்துக்காளை!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பி.ஏ வரலாறு படித்து, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, எம்.ஏ தமிழ் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு பட்டங்கள் பெற்ற நிலையில், தொடர்ந்து படித்து வருகிறார்!
இளமையில் வறுமையின் காரணமாக படிக்காததால், தற்போது படப்பிடிப்பிற்கு இடையிடையே தொடர்ந்து படித்து வருகிறார்!
கல்வியில் “டாக்டர் பட்டம்” வாங்குவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு, நடித்தும், படித்தும் வருகிறார் காமெடி நடிகர் முத்துக்காளை!