பொங்கல் ரிலீசாக தளபதி விஜய்யின் ‘வாரிசு ‘ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய முன்னோட்டக்காட்சியும் இந்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடப் பொங்கல் திருவிழா தளபதி ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ் ஆக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இப்போதுதான் வாரிசு படத்தின் ஸ்டில்ஸ் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் கேமராவுடன் தளபதி கூட்டத்தின் மத்தியில் நடந்து வருவதைப் போலவும் எதிரில் காவி கட்டிய சாமியார்கள் நடந்து வருவதையும் அந்த படத்தில் காண முடிகிறது.
இந்த காட்சிக்கு என்ன அர்த்தம் என்பதை பலவிதமாக பேசப்பட வாய்ப்பு இருக்கிறது .