சிவப்பு சிந்தனையுள்ள பூமியில் அந்த சிந்தனைக்குப் போட்டியாக ‘குய்யாளி’யின் கட்சி தன்னை நிலைப் படுத்திக்கொள்ள நினைக்கிறது.அதற்கு வசதியாக மலைவாழ் கிராமத்தில் இருக்கிற ஒரு வீட்டை தேர்வு செய்கிறது.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிற அத்தையுடன் ( ரம்யா சுரேஷ்.) அந்த வீட்டில் இருக்கிற ரவி ( நிவின் பாலி ) ஸ்போர்ட்ஸ்மேன் .பழுதுபட்ட காலுடன் சும்மா திரிகிற வெட்டி ஆள் .ஒரு காலத்தில் மல்லூர் எக்ஸ்பிரஸ் என பெயரெடுத்தவர்.
இவருக்கும் குய்யாளிக்கும் (ஷம்மி திலகன்.)நடக்கிற மண்ணுரிமைப் போராட்டமே மொத்த கதையும்.!
பஞ்சாயத்துப் போர்டிடம் அத்தை எவ்வளவோ மன்றாடியும் நடக்காத காரியத்தை குய்யாளி தன்னுடைய கட்சி சார்பில் செய்து கொடுக்கிறார்.அதாவது வீட்டை புதுப்பித்து கொடுக்கிறார்.இதன் வழியாக அந்த கிராமத்தின் நிலங்களை அபகரிக்க திட்டம் வகிக்கிறார். காட்டுப்பன்றியிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க வெளி போடுவதற்கு உதவி செய்வதாகவும் அறிவிக்கிறார்.
ஆனால் நிவின் பாலியின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாகிவிட்டது.
இதன் பின் என்னென்ன நிகழ்கிறது என்பதை கேரளத்தின் செழுமையுடன் (ஒளிப்பதிவு தீபக் மேனன்.) சொல்லியிருக்கிறார் இயக்குநர் லிஜு கிருஷ்ணா.
அமைதிக்குப் பின்னர் புயல் உருவாகும் என்பார்கள் அதை நிவின்பாலியின் நடிப்பில் பார்க்க முடிகிறது. தனது முன்னாள் காதலி அதிதி பாலனை பார்க்கிறபோதெல்லாம் ஏக்கம் இருக்கிறது. தனது கணவனுடன் மண முறிவு பெற்று வாழ்கிற அதிதி பாலனை கைப்பிடிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.ஆனால் சூழல் ?
இப்படி நவீன் நன்றாக நடித்திருக்கிறார்.
குய்யாளியாக வருகிற ஷம்மி திலகன் தன்னுடைய தந்தை திலகனைப் போலவேமிரட்டியிருக்கிறார்.ஆட்டையைப்போடும் அரசியல் தலைவர்க்கு இருக்கிற நரித்தனம் அப்படியே இருக்கிறது. ஒன்றிய அரசினை நினைவூட்டுகிறது
கேரளாவில் சிவப்பு சிந்தனையுடைய பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றாகக் கட்சியை வளர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அரசியல்கட்சி செய்யும் தகிடுதத்தங்கள், சூழ்ச்சிகள் ஆகியன அப்படியே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவை நினைவுபடுத்துகின்றன.
படவெட்டு சிறப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.