இரண்டொரு படங்கள் வெற்றி பெற்றாலே சில நாயக நடிகர்களுக்கு நெஞ்சு நிமிர்ந்து விடும்.மார்க்கெட்டில் தங்களுக்கு தனித்த இடம் இருப்பதாக நம்பிக்கொண்டு சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். அவர்களது நடைமுறைகளும் மாறிவிடும். சற்றே திமிர் தலை எடுக்கும்.
இது தமிழ்ச்சினிமாவில் சகஜம்.! இனி மேட்டருக்கு வருவோம் .
சிறந்த இயக்குநர்களில் நலன் குமாரசாமியும் ஒருவர்.
இவரது இயக்கத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா சொல்லியிருந்தார்.
ஆனால் தற்போது அந்த படத்தில் ஆர்யா நடிக்கவில்லை.
நடிகர் கார்த்தி நடிக்கிறார்.
காரணம் என்ன ,ஏனிந்த மாற்றம்?
ஆர்யாவின் போக்குதான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள்.
“தன்னுடைய மார்க்கெட் உயர்ந்து விட்டது.அதனால் சம்பளமும் உயர்ந்து இருக்கிறது.ஆகவே பன் மடங்கு சம்பளம் தரவேண்டும் “என்று கேட்டாராம். இத்துடன் நின்று விடவில்லை என்கிறார்கள். இயக்குநர் நலன்குமாரசாமி தன்னுடன் வந்து விட்டால் வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுக்கலாம்”என ஆலோசனை சொன்னதாகவும் கூறப்படுகிறது.ஆனால் நலன் அதை ஏற்கவில்லையாம்.
சர்தார் கார்த்திக்கு அந்த கதை பிடித்துப்போகவே அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ராஜு முருகனின் படத்தை முடித்துக்கொண்டு இந்த கதையில் நடிப்பதற்கு இசைந்திருக்கிறார்.
” வணிகரீதியான மாஸ் திரைப்படங்களுக்கான காணிக்கையாக இந்தப் படம் இருக்கும் என்று நலன்குமாரசாமி கூறியிருக்கிறார்
ஆர்யாவின் மனமாற்றத்தினால் நல்ல படம் கை மாறி இருக்கிறது.