“நீ என்ன வேனும்னாலும் பேசிக்கய்யா, நாங்க ஒன்னும் உன்ன கேக்கப்போறதில்ல.. எத்தனையோ பேரு ஏறி மிதிக்கிறாய்ங்க ,அதில் நீயும் ஒன்னு” என்று கேளா காதுடன் படுத்திருக்கிறது பட உலகம். அதாவது தமிழ்ப்பட உலகம்.
“அதனாலென்னா உன்ன உருட்டிப் புரட்டிப்போட்டு உடம்புல ஒட்டுத் துணி இல்லாம அசிங்கப்படுத்தாம விடமாட்டேன்னு சில பேர் பேசிட்டு இருக்காங்க.!”
தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் அந்த சிலரில் முக்கியமான ஆள். தர்மவான்.ஏழைகளுக்கு நல்லவிதமாக உதவிகள் செய்பவர் .இருந்தாலும் சினிமாத்துறையில் இருப்பவர்களை நாறடிப்பார் பொது மேடையில்!!
ஒரு பேட்டியில் வெளிமாநில நடிகைகளை சவட்டி எடுத்திருக்கிறார்.இது நியாயமா சாரே ?
” சினிமாவில் பெரிய நடிகை ஆகணும்னா அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கத்தான் வேண்டும்.
.திறமைக்கு இங்கு மதிப்பில்லை,
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும்னா செய்துதான் ஆகனும் . ஆனால் சில நடிகைகள் கறாராக உள்ளனர். அதுவும் தமிழ் நடிகைகள் ஸ்ட்ரிடிக்ட்டாக இருக்காங்க.!ஆனா வேறு மாநிலத்திலிருந்து வருகிறவர்கள் அதற்கு தயாராகவே வருகிறார்கள் “என்று கூறியுள்ளார்.