பாலிவுட்டில் பரபரப்பு பஞ்சணையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறவர் கங்கனா ரனாவத்.
தமிழில் தலைவி ஜெயலலிதாவாக வேஷம் கட்டியவர். படம் அவ்வளவாக போகவில்லை என்றாலும் பேசப்பட்டது.அதற்கு காரணம் கங்கனா .தற்போது அரசியலில் சேருவதற்கு கங்கனா முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இவர் பாரதிய ஜனதா அனுதாபி என்பது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் மோடியை மிகவும் நம்புகிறவர்.
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்.
“நான் என்னுடைய ஹோம் டவுனில் இருந்து போட்டியிட விரும்புகிறேன் “என்பதாக சொல்கிறார். இமாச்சல பிரதேசம் ,மண்டி மாவட்டம் ,சூரஜ்பூர் இவரது ஹோம் டவுன். பாஜபி டிக்கெட்டில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்ததை அந்த கட்சியின் தலைவர் வரவேற்றிருக்கிறார் .
ஆகவே இவரை தேர்தலில் எதிர்பார்க்கலாம்.