குடும்பமே விஷாலை பற்றிய கவலையில்.!
அண்ணனுக்கு கல்யாணமாகி பிள்ளை குட்டியை பெற்று சந்தோஷமாக வாழ்கிறபோது தம்பிக்கு இன்னும் கல்யாணமாகவில்லை என்றால் பெத்தவங்களுக்கு கவலையாக இருக்காதா ?
மனுஷனால் ஆகாததை தெய்வம்தான் செய்யும் என்கிற நம்பிக்கையுடன் குடும்பத்துடன் காசிக்கு போயிருக்கிறார் நடிகர் விஷால்.!கூடவே நண்பர்களும்.!
அங்கே சென்றவர் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி விட்டார்.
அங்குள்ள கோவில் சீரமைக்கப்படுவதை பார்த்து நெகிழ்ந்து விட்டார்.உடனே பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் பாராட்டு.!
“அன்புள்ள மோடி அவர்களே,நான் காசிக்கு சென்றேன்.அற்புதமான தரிசனம். வழிபாடு நடத்தினேன்.கங்கை நதியை தொட்டு வணங்கினேன்.உங்களுக்கு கடவுள் அருள் கிட்டட்டும் .காசி ஆலயத்தை சீரமைத்து புதுமைப்படுத்துவதை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களை வணங்குகிறேன்”என்பதாக விஷால் கூறி இருக்கிறார்.