விதி யாரை விட்டது?
முன்னாள் நடிகையான ரம்பா ஈழத்தமிழரை கல்யாணம் செய்து கொண்டு கனடாவில் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மூணு குழந்தைகள். இரண்டு பெண்.ஒரு ஆண் .
இரண்டு பெண் குழந்தைகளும் கனடாவில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றன.அந்த குழந்தைகளை அழைத்து வருவதற்காக பள்ளி சென்று திரும்புகையில் எதிரில் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகி விட்டது.
ரம்பா மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார்.
காரில் இருந்த நான் ,ஆயா ,மற்ற குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பி விட்டோம்.ஆனால் என்னுடைய இளைய மகள் சாஷா படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.அவளுக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நாமும் நமது வாசிப்பாளர்களுடன் இணைந்து பிரார்த்திப்போமாக.