வேறு வழியில்லை ,ரெட் ஜெயண்டுக்கு கொடுத்துதான் ஆகவேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.அதாவது ‘வாரிசு’ படத்தின் தியேட்டர்கள் உரிமையை.!
வம்சிபைடிப்பள்ளி இவர் தெலுங்கு டைரக்டர். தில் ராஜு தெலுங்கு பட தயாரிப்பாளர் .இவர்கள் தயாரிப்பில்தான் தளபதி விஜய் நடிக்கிற வாரிசு ( தமிழ் ) வாரிசிடு (தெலுங்கு ) இரு மொழிப் படம் தயாராகியிருக்கிறது. இரண்டுமே பொங்கல் ரிலீஸ்.
அஜித்குமார் நடித்திருக்கிற துணிவும் பொங்கல் வெளியீடுதான்,போனிகபூர் தயாரிப்பாளர். இந்தப்படத்தின் தமிழக விநியோக உரிமையை சின்னவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கி இருக்கிறது.
ரெட் ஜெயண்டின் பாலிசி என்னவெனில் தியேட்டர்காரர்களிடம் முன்பணம் எதுவும் வாங்குவதில்லை.இதனால் தியேட்டர் அதிபர்கள் ரெட்ஜெயண்ட் விநியோகம் செய்யும் படங்களை போட்டியிட்டுக்கொண்டு வாங்குகிறார்கள்.அதனால் துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது.
வாரிசு படத்தை வாங்கியிருப்பவர் தயாரிப்பாளர் செவென் ஸ்கிரீன் லலித்குமார் வாங்கியிருக்கிறார் என்கிறார்கள் .தளபதி விஜய்யின் அன்பு இவர்க்கு அதிகம் உண்டு.ஆனாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் இருக்கிறது.
வாரிசு பட விநியோக பொறுப்பை ரெட் ஜெயண்டிடம் கொடுக்கப்போகிறார் என்கிறார்கள்.
திருச்சி தவிர மற்ற ஏரியாக்கள் சின்னவர் வசமாகும் . இதனால் தளபதி விஜய் ,அஜித்குமார் இருவரது படத்துக்கும் தமிழகத்தில் சமமாக தியேட்டர்கள் கிடைக்கும்.
ரெட் ஜெயண்டுக்கு கொடுக்கக்கூடாது என்று மல்லுக்கட்டிய தளபதி விஜய் இதற்கு மறுப்பு சொல்லவில்லை என்பதுதான் ஹைலைட்ஸ்.!