இப்படியும் அலறல் சத்தம் கேட்கவே செய்கிறது ,சில கணவன்களிடமிருந்து.!
“பொண்டாட்டி அடிக்கிறா ,உதைக்கிறா ! போலீசில் சொன்னாலும் உதவிக்கு வரல. என்ன செய்வேன் கடவுளே “என்று காத்திருக்கிற புருஷர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
கர்நாடகாவில் யதுநந்தன் ஆச்சார்யா என்கிற ஒருவர் பிரதமர் மோடிக்கு சோசியல் மீடியா வழியாக கோரிக்கை விட்டிருக்கிறார்.
“தினமும் பொண்டாட்டி அடிக்கிறாயா ! மிரட்டுறா.! உயிரை வாங்குவேன்னு மிரட்டுறா .யாராவது உதவி செய்ய மாட்டிங்களா ?யாருமே உதவி செய்யல.ஏன்னா நான் ஆம்பள.!கத்தியால் குத்துறா .இந்த பெண் சக்தியைத்தான் நீங்க ஆதரிக்கணுமா ?குடும்ப கொடுமைன்னு நான் புகார் செய்யக்கூடாதா?முடியலே! என் பொண்டாட்டி கத்தியால் என் கையை கீறிட்டா !படைத்த பாருங்க” என்று பதிவிட்டிருக்கிறார்.
போலீஸ் கமிஷனர் ,ஒன்றிய அரசு சட்டமந்திரி கிரண் ரிஜ்ஜு ஆகியோருக்கு நகல் அனுப்பப்பட்டிருக்கிறது.