
ஒரு காலத்தில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தவர் ஹன்சிகா மொத்வானி .வட இந்தியப்பெண்ணாக இருந்தாலும் வாழ்வு கொடுத்தது தமிழ்நாடுதான்.!
இதனால் தமிழ் நாட்டை வாழ்விடமாக மாற்றிக்கொள்ள ஆசைப்பட்டார்.
அதனால் காதலிலும் விழுந்தார். அழகன் சிலம்பரசனுடனான காதல் என்ன காரணத்தினாலோ முறிந்து போனது. இதில் வேடிக்கை என்னவெனில் இருவருக்குமே வலி இல்லை ! ஒருவேளை இருவருமே மறைத்து விட்டார்களோ என்னவோ ,பிரிதல் சின்ன அறிவிப்புடன் நின்றது.
தற்போது ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4 ம் தேதி கல்யாணம்.!
சொகைல் கத்துரியா என்பது கணவனாக வரக்கூடியவரின் பெயர்.தொழிலதிபர்.
இருவரும் தற்போது பாரிசில்.!ஈபிள் டவர் முன்பாக முழந்தாளிட்டு புரபோஸ் செய்திருக்கிறார் கத்துரியா .
கத்துரியாவுடன் வெளிநாடு சென்ருக்கும் ஹன்சிகா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்களை இன்ஸ்ட்டாவில் வெளியிட்டிருக்கிறார்.