
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும். ” இருக்கும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஜிபி முத்து வுக்கு இதுதான் முதல்படமாம்.ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.
நடிகர் சதீஷ் பேசியபோது “இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். “என்றார் .
நடிகை சன்னி லியோன் பேசுகையில் ” எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.”என்று கேட்டுக்கொண்டார்.தயாரிப்பாளர் வீர சக்தி ,தயாரிப்பாளர் கே..சசிகுமார் ஆகியோரும் பேசினார்கள்.
இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் டி.. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.