
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.
சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்
இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சத்யதேவ் , நடன இயக்குநர் ராதிகா ,சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் , இயக்குநர் கே.பி.தனசேகரன்
நடிகர் ரவிமரியா ,நடிகை பூனம் பஜ்வா ,, பாடலாசிரியர் வெள்ளத்துரை
நடிகர் ராம்கி, இயக்குநர் பேரரசு, நடிகர் நட்டி ,ஆர் கே.செல்வமணி ஆகியோர் பேசினார்கள்.இறுதியாக வினியோகஸ்தர்கள் சங்க தலைவரும் ,கண்டன்ட் ராஜா கே ராஜன் பேசும்போது,வழக்கம் போல யூ டியூபர்களுக்கு மேட்டர் கொடுத்து பேசினார்.“நட்டி எப்போதுமே ஒரு ஹேண்ட்சம் ஹீரோ. இந்தியில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக இருப்பவர். அவருடன் ‘பகாசுரன்’ என்கிற ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எனக்கு செல்வராகவனின் அப்பா வேடம். அந்தப் படத்தில் நடிக்கும்போது கறுப்பாக இருந்தார்.. இப்போது என்ன வெள்ளையாக இருக்கிறாரே என்று பார்த்தால், அந்த பாடலில் நாயகியுடன் உரசி உரசி நடனமாடி கலராக மாறி விட்டார் போல.. நான் சர்ச்சையாகப் பேசுபவன் என்று கூறுகிறார்கள்..

படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குநர் தான் காரணம்.. ஆனால் படம் வெற்றி பெறும்போது ஹீரோ சம்பளத்தை ஏற்றுகிறார். தோல்வி அடையும் போது அவர் சம்பளத்தைக் குறைப்பதில்லை.. ஆனால் இயக்குநர் தான் பாதிக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரோடு அந்த படத்தின் விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ‘பொன்னியின் செல்வன் ‘ மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் கூட ஆந்திராவில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தினால் தான் இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.. இங்கு இருப்பவர்கள் ஆந்திராவில் சென்று தீபம் ஏற்ற வேண்டுமா..?
அதேபோல பெரிய நடிகர்கள் நடித்தால்தான் திரையரங்குகளுக்குக் கூட்டம் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. சிறிய படமாக பெரிய அளவில் பிரபலம் இல்லாத இயக்குநர் அவரே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள ‘லவ்டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப படம் இருப்பதை தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் மூலம் காணமுடிகிறது. நல்ல படங்களைக் கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு நிச்சயம் வருவார்கள்.. அதற்கு பெரிய நடிகர்கள் தான் வேண்டும் என்கிற அவசியமில்லை” என்று கூறினார்.