ரஜினிகாந்த் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்த கபாலி படம் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் அமெரிக்கா போன ரஜினி, உடல் நலப் பரிசோதனைகள் முடிந்து, கபாலி வெளியான இரு தினங்களுக்குப் பிறகே இந்தியா திரும்பினார். தற்போது முழு ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த் , 2.ஓ படம் தொடர்பான தகவல்களைஅவ்வப்போது ஷங்கரிடம் கேட்டறிந்து வருகிறார். இம்மாதம் கடைசி வாரத்தில் அவர் 2.ஓ படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் என்கிறது ஷங்கர் தரப்பு! இப்போது ரஜினி இல்லாத காட்சிகளை மட்டும் இயக்குநர் ஷங்கர் படமாக்கி வருகிறார். ரஜினி படப்பிடிப்புக்கு வந்ததும், அக்சய் குமார், எமி ஜாக்ஸன் தொடர்பான காட்சிகள் படமாகும் என்கிறார்கள்.