பிரியாணி சமைக்கத் தெரிந்த சினிமாக்காரர்களில் அஜித்குமாருக்குத் தனியிடம் கொடுத்து விடலாம்.அந்த அளவுக்கு சுவையாக சமைக்கக்கூடியவர்.
விருந்தினர்களை கவர வடை பாயாசம் உள்ளிட்ட விருந்து அளிப்பதை விட பிரியாணி போட்டால் அமர்க்களமாக கருதப்படுகிறது.
அண்மையில் நம்ம சூப்பர் ஸ்டார் சூர்யா கேரளம் சென்றிருந்தார் .அங்கு மனைவி ஜோதிகா நடிக்கிற காதல் படத்தின் செட்டுக்கு சென்றிருந்தார்
சூர்யா வருவதை முன்னதாகவே அறிந்திருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மொத்த படக்குழுவினர்க்கும் ஸ்பெஷல் பிரியாணி விருந்து போட்டு விட்டார்.
விருந்தோம்பலில் நமக்கு இணையானவர்கள்தான் கேரளத்து சகோதரர்களும்.!