இன்று மாலை சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புக் கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால்,
தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி அவதூறாக விமர்சனம் செய்து கொடுத்த பத்திரிகை பேட்டிக்கு ஒரு வார காலத்திற்குள் வருத்தம் தெரிவிக்க வில்லை என்றால், விஷால் நடிக்கும் (கத்தி சண்டை தவிர) அவரின் எந்த படத்திற்கும் திரைப்பட அமைப்புகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டது.இவ்விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.